திருவாரூர்: சிறுவர்கள் ஓட்டிய டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்து

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகத்தில் இருந்து மூன்று சிறுவர்கள் நேற்று முத்துப்பேட்டை நோக்கி டிராக்டரை ஓட்டிச் சென்றனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை ஓரம் குளம் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, டிராக்டரில் இருந்த மூன்று சிறுவர்களும் உயிர் தப்பினர். டிராக்டர் ஆட்டோவின் மீது மோதியதால், அருகில் இருந்த குளத்திற்குள் பாயாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி