தண்ணீர் கேட்டு மூன்று கிராம மக்கள் சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் அருகே விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காததைக் கண்டித்து மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பிலிருந்து பிரிந்து செல்லும் பாமணி ஆறு சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சென்று முத்துப்பேட்டை கடல் பகுதியில் கலக்கிறது. 30 கிலோ மீட்டர் தூரம்வரை பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களுக்கு பாமணி ஆறு மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாமணி ஆற்றில் உரிய நீர் வரவில்லை.

இதனால் ஆற்றுப் பாசனத்தை நம்பி தற்போது உழவுப் பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெருகவாழ்ந்தான் அருகே இடைச்சுமூளை கிராமத்தில் பரசபுரம், சோத்திரியம் கிராமங்களைச் சேர்ந்த, விவசாயிகள் பொதுமக்கள் முத்துப்பேட்டை - மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி முத்துப்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி