குன்னாலூர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா. கோட்டகம் பகுதியில் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில் தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த ராஜா நேற்று செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தனக்குரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து ராஜா பத்திரமாக மீட்கப்பட்டார். ராஜா மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.