திருவாரூர்: இருசக்கர வாகன திருட்டு: குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டது. நன்னிலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், வின்சென்ட் ராஜுவுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி நவீனுக்கு 1 ஆண்டு சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விரைவான நடவடிக்கைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பேரளம் போலீசாரைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி