திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிவத்து கிராமத்தில் வசித்து வருபவர் தமிழரசி. இவர் தனது இரு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இதனிடையே அப்பகுதியில் சென்று கொண்டிருந்த டிராக்டர் போஸ்ட்மரத்தில் மோதியதில் மின்கம்பம் அறுந்து தமிழரசியின் கூரைவீடு மீது விழுந்துள்ளது. இதனால் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ மளமளவென பரவியதில் கூரைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
இதில் வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து நாசமானது. இதனால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவியும், பாதிக்கப்பட்ட வீட்டிற்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் அமைத்து தர வேண்டும் என தமிழரசியும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.