திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலமருதூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்தக் கட்டிடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேலமருதூரில் புதிய ரேஷன் கடை கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.