திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 62 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பேரிடர் கால பழுது நீக்கம் என கூறி பெயரளவில் கட்டிடம் சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதாலும், வரும் காலம் மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பல்வேறு முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.