இந்த நிலையில் பெருந்தரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான கீழப்புலியூர், மேலப்புலியூர், புலியூர், வடக்கு வேலி, பொறுக்கமேடு, மேப்பலம், வெல்லக்குடி, தென்புலியூர் உள்ளிட்ட கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்தும், அரசின் இந்த முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக திகழும் 100 நாள் வேலைத்திட்டத்தை பாதிக்கும், குடிசை வீடுகளில் வாழும் மக்களுக்கு அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தை பாதிக்கும், மக்களின் மீது வரி சுமை அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏழை மக்களை பாதிக்கும் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்டன கோசங்களை எழுப்பினர்.