விழாவையொட்டி மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, புடவை மற்றும் பாவாடை தாவணி அணிந்து வந்திருந்தனர். விழாவில் பங்கேற்ற மாணவர்கள் பொங்கல் பானைகள், கரும்புகள், பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்கள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் DJ இசைக்கு ஏற்ப ஆடி பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு