மன்னார்குடி: திமுக நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்..?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் நகராட்சி நகர மன்ற தலைவராக பாத்திமா பஷீரா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த 16 நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடந்த ஜனவரி 31ம் தேதி கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதிக்கு வழங்கினர். 

இந்த நிலையில் நாளை கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நகர மன்ற உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நகர மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நகர மன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி