முத்துப்பேட்டை பேரூராட்சி 5-ஆவது வாா்டு ஆசாத் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி துணை இயக்குநா் மற்றும் சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அதிகாரிகள் 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.