திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சி, செருகளத்தூர் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அஇஅதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இன்று மன்னார்குடியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் முன்னிலையில் தங்களை அமமுகவில் இணைத்துக் கொண்டனர்.