மன்னார்குடியில் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிதாக 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழக அரசு மீது கொடூரமான தாக்குதல்களை தொடுத்து, தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை வழங்காமல் இழுத்தடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.