மன்னார்குடி அருகே எட மேலையூர் நடுத்தெரு ஊராட்சியில் பொது விநியோக கட்டிடம் சுமார் 12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு, திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.