திருத்துறைப்பூண்டி: வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர் கைது

திருத்துறைப்பூண்டி பா்மா காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகள் சங்கீதா. இவரிடம் திருத்துறைப்பூண்டி தோப்படித் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் ருபாய் பெற்றுள்ளார். 

ஆனால், வேலை ஏதும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் சங்கீதா பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்தன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி