மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் குறுவை உழவு பணி தீவிரம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை பகுதிகளை தண்ணீர் வந்தடைந்த நிலையில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் தற்போது குறுவை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மன்னார்குடி எடமேலையூர், காரிக்கோட்டை, காஞ்சிகுடிக்காடு, குருவைமொழி, பாமணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டுநடும் பணிகளுக்காக நிலத்தை டிராக்டர் மூலம் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணறு மூலமும் ஆற்று நீரைக் கொண்டும் விவசாயிகள் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி