இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் குளிர்பானங்கள் இலகுவாக கிடைக்கும் வகையிலும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் உற்பத்தி பொருளான தர்பூசணியில் ஊசி மூலமும் கலர் திரவங்களை ஏற்றி கலப்படம் செய்வதாக பொய் பிரச்சாரங்களை செய்வதால் தர்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று தர்பூசணி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பி. ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.