திருவாரூர்: எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று சொல்லவில்லை- அமைச்சர் டிஆர்பி ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் திருத்தம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் பல கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 30 நாட்களில் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இப்பணியை எவ்வாறு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக, மன்னார்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிதாக இயக்கப்பட்ட பேருந்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி