கீரலத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கனமழையால் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, மாணவ மாணவியர்கள் பள்ளி வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர். மடப்புரம், கீரலாத்தூர், திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.