4 வழி தடம் அகலப்படுத்துதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

திருவாரூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் கூடலூர் மைசூர் சாலை (திருவாரூர் நகரப் பகுதி) கி.மீ. 25/4-26/8 வரை இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகளுக்கும், சிறுபாலங்கள் அகலப்படுத்தும் பணிகளுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 14.06 கோடி ஆகும்.

தொடர்புடைய செய்தி