திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட பரவாக்கோட்டை ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ. 1.48 கோடி மானிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று வெகு சிறப்பாக தொடங்கி வைத்தார். இது 15வது மத்திய நிதி ஆணைக்குழுவின் 2024-2025 நிதியின் கீழ் அமையவுள்ளது. புதிய கட்டிடம் கிராம மக்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.