மன்னார்குடி கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பெண் குழந்தைகளுக்கான 3 மாத தற்காப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. தியானம், உடற்பயிற்சி, தாக்குதல் மற்றும் தடுத்தல் முறைகள் கற்றுத்தரப்பட்டன. நிறைவு விழாவில் தலைமை ஆசிரியை மா. தேவி தலைமை வகிக்க, வட்டார வளமைய மேற்பார்வையாளர் த. தனபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கராத்தே பயிற்சியாளர் கே. ராஜகோபால் பயிற்சி அளித்தார்.