திருவாரூர்: பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் (VIDEO)

மன்னார்குடியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வாயிலில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிச்சைகண்ணு கண்டன உரையாற்றினார். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் விருப்ப ஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. 

170 ஊழியர்களுக்கும் சாதி சான்றிதழ் சரிபார்ப்பு எனும் பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இருப்பதை கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உரிய பலன்களை கிடைக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி