சோழங்கநல்லூரில் தரமற்ற சாலை போடப்பட்டதாக குற்றச்சாட்டு

கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் தெற்குத் தெருவில் சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் 500 மீட்டர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அமைத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே ஜல்லிகள் பெயர்ந்து வருவதாகவும், கைகளால் தேய்த்தாலே பெயர்ந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை அமைப்பில் ஊழல் நடந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி