திருவாரூர்: அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

முத்துப்பேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ராஜா ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முத்துப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லூரி தற்காலிகமாக மன்னார்குடி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இளங்கலை வரலாறு அரசியல் அறிவியல் வணிகவியல் கணினி அறிவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பித்து சேர்க்கை பெறாதவர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இம்மாதம் ஜூன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி