தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள பாரதி நகர் எட்டாவது குறுக்குத் தெரு விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 72), இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு உறவினர் இல்ல திருமண விழாவிற்காக வெளியூர் சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த இருபதாம் தேதி அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த ரூ.20,000 மதிப்புள்ள உண்டியல் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணிக்கை பணமாக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி