ஆத்திரா மாநிலம் கடப்பாவில் இருந்து 30 பேர் தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தனியார் சுற்றுலா பேருந்தில் வந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை தஞ்சை கரத்தை கோடியம்மன் கோயில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட் டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் நடு தடுப்பு கட்டையில் மோதி நின்றது உள்ளே இருந்த
கற்றுலா பயணிகள் பயந்து போய் கூக்குரலிட்டனர். இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைத்தனர். சில பயணிகள் கண்ணாடி வழியே வெளியே குதித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சை போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.