இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக ஆற்றுப்பகுதியில் குதித்து மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டினர். ஆனால் மாணவன் உடல் கிடைக்காததால் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தீவிரமாக தேடினர். நீண்ட தேடலுக்குப் பின் மாணவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் சபரீஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைத்தது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?