மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அருகே திருப்புன்கூர் பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.