நாகை: பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காராபலன் கிராமத்தில் இரட்டை சகோதரிகள் மற்றும் அவர்களது தம்பி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரில் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவரான பியூலா நான்சி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு சகோதரி மற்றும் தம்பி விக்ராந்த் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தஞ்சாவூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி