நாகை: ஊழியர் மீது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி நரிமுடுக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும் சரவணன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விவகாரத்தை விலக்கி விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் நரிமுடுக்கு சென்று கொண்டிருந்த வினோத்தை 8 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று சுமார் 5 மணி நேரம் நிர்வாணமாக்கி செருப்பாலும் கட்டையாலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். 

இதில் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது நண்பர்கள் உறவினர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவீன உலகத்தில், தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தப்பட்டதாக ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி