நாகை: விரட்டி பிடித்த 6 போ் கைது; போலீசார் அதிரடி (VIDEO)

சீர்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபானங்களை கடத்தி வந்த 6 பேரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபானங்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, சீர்காழி காவல் ஆய்வாளர் புயல். பாலசந்திரன், உதவி ஆய்வாளர் ராதாபாய் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலிலிருந்து புதுப்பட்டினம் நோக்கி சென்ற கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 

இதுதொடர்பாக, காரை ஓட்டிவந்த புதுப்பட்டினம் வெள்ளக்குளத்தை சேர்ந்த சண்முகத்தை (39) கைது செய்தனர். தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த கார்கள் போலீசாரை பார்த்ததும் தப்பினர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர். 

விசாரணையில், காரைக்கால் பகுதியை சேர்ந்த சுபாஷ் (28), பிரபாகரன் (33), சுகுமார்(46), முஜிபுர்ரஹ்மான் (46), முருகன் (44) உள்ளிட்டோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சொகுசுகார்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1,548 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி