திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சன்னாநல்லூர் கடை வீதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்தி குவார்ட்டருக்கு பத்து ரூபாய் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் மொத்தம் அதிகப்படியாக 20 ரூபாய் வாங்குவதாகவும் கொடுக்க மறுப்பவர்களிடம் மிரட்டும் தொனியில் அவர்கள் நடந்து கொள்வதாகவும் மது பிரியர்கள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர்.