இந்நிலையில், மடத்திக்காடு பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்க சென்ற போது, கிராம மக்கள் அவர்களை ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என பிரச்சனை செய்ததால், மத பிரச்சார கும்பலை சேர்ந்த சிலர் திரும்பி வந்துள்ளனர். தொடர்ந்து மாலையில், களத்துார் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு நின்றுக்கொண்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகளிடம், துண்டுப்பிரசுரம் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அறிந்த களத்துார் பகுதியை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பா.ஜ.க வினர் மத பிரச்சாரம் செய்த நபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். மேலும், போலீசாருக்கு தகவல் அளிப்பதாக கூறியதால், 13 நபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இதையடுத்து, சுமார் 27 பேரை பிடித்து, திருச்சிற்றம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிசந்திரன் பா.ஜ.க வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகார்களை பெற்று கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.