பட்டுக்கோட்டை: கோயிலில் திருடிய மூவர் கையும் களவுமாக சிக்கினர்

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது ராவுத்தர் முன்னடியார் கோயில். சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த வீரக்குமார் மற்றும் இருவர் உட்பட 3 பேரும் இந்த கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். கோயில் உள்ளே சிலர் உண்டியலை உடைத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் அவர்களை கையும் களவுமாக பிடித்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். 

பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் நசீர் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ரமேஷ், ஹரிஹரன், சத்தீஸ்வரன் என்பவர்களே பட்டுக்கோட்டை மதுக்கூர் பகுதிகளில் கோயில் உண்டியல்களை உடைத்து திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது. இந்த 3 பேரையும் அவர்கள் வைத்திருந்த பணத்தையும், திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும், இரு சக்கர வாகனத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி