பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குஜராத் கமலேஷ் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். காரை விரட்டி பிடித்த போலீசார் சோதனை செய்தபோது சுமார் 100 கிலோ அளவிலான குட்கா போதைப் பொருள் பெங்களூரில் இருந்து கடத்தியது தெரிய வந்தது. கமலேஷை கைது செய்து, குஜராத் ராஜு சிங் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் பட்டுக்கோட்டை ரமேஷ் என்பவருக்கு டெலிவரி செய்வதற்காக கடத்தி வந்தனர். ஆனால் ரமேஷ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.