கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த கஞ்சமலை மகன் காசிநாதன் இவர் கடந்த 2 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று (பிப்.4) காசிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.