திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஆண் இளம் சிறாரை பாடம் கற்றுத் தருவதாக கூறும் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த பெண்ணின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடித்து திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் எதிரிக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 18000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.