வேலங்குடியில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள வேலங்குடி சோதனை சாவடியில் இன்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 280 மது பாட்டில்கள் மற்றும் 50 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து பேரளம் போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை செய்தனர். 

விசாரணையில் காரைக்கால் விழுதியூர் பகுதியை சேர்ந்த மதியழகன் மற்றும் காரைக்கால் தல தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து, பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன் மற்றும் பாலமுருகனை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் 250 மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.38000 என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி