நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

நீடாமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயிலில் 33 ஆம் ஆண்டு கன்னி பூஜை விழா மற்றும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் திருவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம், பூக்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். 

பின்னர் மகா மாரியம்மன் மற்றும் திரு விளக்கிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழாவில் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை, படி பூஜைகள் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி