திருவாரூர்: வகுப்பறையில் பாம்பு கடித்து.. மாணவன் பலி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரசுப் பள்ளியில், 11 ஆம் வகுப்பு மாணவன் சிவப்பிரகாஷ் வகுப்பறையில் புத்தகம் எடுக்கும்போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிதுவரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தான். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி