இதில் முதல் வகுப்பில் 8,571 மாணவர்களை சேர்த்து தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8,000 மாணவர்களை சேர்த்து திண்டுக்கல் மாவட்டம் 2ஆம் இடத்தையும், 7,711 மாணவர்களை சேர்த்து திருச்சி மாவட்டம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் திருவாரூர் மாவட்டம் 6,592 மாணவர்களை சேர்த்து 8ஆம் இடத்தைப் பிடித்து, மாணவர் சேர்க்கையில் டாப் 10 இல் இடம் பிடித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இரா. சௌந்திரராஜன், முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் டாப் - 10 இல் திருவாரூர் மாவட்டம் இடம் பிடிக்க காரணமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், துணை நின்று உற்சாகப்படுத்திய வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.