திருவாரூர்: பஸ் விபத்து.. போனில் விசாரித்த மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற நகரப் பேருந்து, திருநெய்ப்பேர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனைத் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி