உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி பெருவிழா கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்த நிலையில் முக்கிய விழாவான உலக பிரசித்தி பெற்ற ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆழித்தேரை இழுத்தனர்.