திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா மொகைதீனை, அப்துல் பாசித் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கஞ்சா கும்பல் வீடு புகுந்து தாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அப்துல் பாசித் (21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த செய்தியாளர் முகைதீன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.