திருவாரூர்: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப் பதிவுகளுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.11.2025 அன்று, ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். மேலும், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி