சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ் ஒன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி பகுதியில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.