பொங்கல் வைப்பதை பெரும்பாலும் பலரும் பின்பற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் குடவாசல் அருகே எண்கள் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்சட்டி, மண்பானை போன்ற பொருட்கள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நலிவடைந்த நிலையில் தொழில் செய்து வரும் மண்பாண்ட தொழிலாளர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
குடவாசல் அருகே பல தலைமுறையாக சில குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தற்பொழுது மண்பானை பயன்படுத்தாத நிலையில் மண்பாண்ட தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தில் பித்தளை பாத்திரங்கள் மற்றும் குக்கரில் பொங்கல் வைப்பதால் வியாபாரம் மந்தமாக உள்ளது, அரசு மழைக் காலங்களில் 5000 ரூபாய் நிவாரணமாக வழங்கும் தொகையை 10000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய மண் எடுப்பதற்கு அரசு அனுமதி தேவையில்லை என்று அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.