திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள புவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மாலை நடைபெற்றது. புஸ்பாவன நாதர், கற்பகவள்ளிதாயார் பெரிய தேரில் எழுந்தருளினர். முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர், ராஜராஜேஸ்வரி தாயார், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.