தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த மகாலிங்கம் (67) என்பவரை சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அருள் செல்வனின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் கைது செய்தனர். பி.காம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏராளமான மருந்து, மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.